Tuesday, January 3, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/04/large/924256.jpgமயிலாப்பூர் வங்கியில் தீ: லாக்கரில் இருந்த பணம் தப்பியது

சென்னை: மயிலாப்பூரில் உள்ள வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் பணம் இருந்த லாக்கர் சேதமின்றி தப்பித்தது. சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பொதுத் துறை வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. தரைதளத்தில் இயங்கி வந்த வங்கியில் இருந்து நேற்று அதிகாலை திடீரென கரும்புகை வெளியேறியது. அதைத் தொடர்ந்து தீப்பற்றி மளமளவென எரியத் தொடங்கியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவலாளி, உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து மயிலாப்பூர், திருவல்லிக்கேணி மற்றும் அசோக் நகர் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. தீ விபத்து குறித்து மயிலாப்பூர் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...