Tuesday, January 3, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/04/large/924399.jpgபொங்கலுக்காக சென்னை உட்பட தமிழகம் முழுவதிலும் ஜன.12-ம் தேதி முதல் 16,932 பேருந்துகள் இயக்கம்

சென்னை: பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவோரின் வசதிக்காக தமிழகம் முழுவதும் ஜன.12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 16,932 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்புவதற்காக 15,619 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதிலும் சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் போக்குவரத்து, காவல், நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...