Friday, February 17, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/18/large/945689.jpgவேலைவாய்ப்பு திறன் பயிற்சியை மேலும் மேம்படுத்த வேண்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: ‘நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புக்குரிய திறன் பயிற்சிகளை மாணவர்களுக்கு பலன் அளிக்கும் விதமாக மேம்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட திறன் மேம்பாட்டுக்கான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் வாயிலாக பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களில் விருப்பத்துக்கேற்ற வேலை வாய்ப்பினை பெறும் வகையில் முன்னணி தொழில் நிறுவனங்களால் தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கென தொடங்கப்பட்ட www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் இலவச படிப்புகள், குறைவான கட்டணத்துடன் கூடிய படிப்புகள் மற்றும் பாடத்திட்டத்துடன் கூடிய படிப்புகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...