
சென்னை: ஆவின் நிறுவனத்தில் உள்ள மேலாளர், துணை மேலாளர், தொழில்நுட்ப வல்லுநர் உள்ளிட்ட 322 காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை பால்வளத் துறை ஆணையர் ந.சுப்பையன் வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆட்சிக் காலத்தில், மாநிலத்தில் உள்ள மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களில் நடைபெற்ற நியமனங்களில் பல்வேறு முறைகேடு நடந்ததாக கண்டறியப்பட்டது. இதையடுத்து, முறைகேடாக நியமனம் செய்யப்பட்ட 201 பேரின் பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள 322 பணியிடங்களை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்புவதற்கான ஆணையை பால்வளத் துறை ஆணையர் ந.சுப்பையன் வெளியிட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்