Thursday, February 2, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/03/large/938086.jpgசென்னை துறைமுகம் - மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: கடலோர ஒழுங்குமுறை ஆணைய அனுமதிக்கு பரிந்துரை

சென்னை: சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சரக்கு வாகனப் போக்குவரத்தை மேம்படுத்தவும் சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே மேம்பாலம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி 2010-ல் ரூ.1,815 கோடியில் திட்டமிடப்பட்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஜெயலலிதா முதல்வரான நிலையில், கூவம் ஆற்றில் பாலத்துக்கான தூண்கள் அமைப்பதால் ஆற்றின் நீரோட்டம் பாதிக்கப்படும் எனக் கூறி அத் திட்டம் கடந்த 2012-ல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இத்திட்டத்தை மீண்டும் தொடங்க 2015-ம் ஆண்டு மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...