Monday, February 6, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/06/large/939778.jpgசிவகாசி மாநகராட்சி ஆணையருக்கு அதிமுக பெண் கவுன்சிலரின் கணவர் கொலை மிரட்டல் - எஸ்பியிடம் புகார்

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, தனக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக பெண் கவுன்சிலரின் கணவர் சரவணன் மீது சிவகாசி டிஎஸ்பி இடம் புகார் அளித்தார்.

சிவகாசி மாநகராட்சியில் 10-வது அதிமுக கவுன்சிலர் சாந்தி. இவரது கணவர் சரவணகுமார். இவர் அதிமுக பகுதி செயலாளராக உள்ளார். திருத்தங்கல் பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து 10 மற்றும் 19-வது வார்டுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் 19-வது வார்டுக்கு குடிநீர் வழங்க எதிர்த்த சரவணகுமார், குடிநீர் செல்லும் வழியை அடைத்து வைத்தார். குடிநீர் வராதது குறித்து 19-வது வார்டு பொதுமக்கள் அளித்த புகாரில் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஷ்பிரியா, பொறியாளர் சாகுல் ஹமீது, உதவி பொறியாளர் ரமேஷ் ஆகியோர் மேல்நிலை குடிநீர் தொட்டியில் ஆய்வு செய்தனர். அப்போது தொட்டியில் தேவையான அளவு நீர் இருப்பு இருந்ததால் 19-வது வார்டுக்கு குடிநீர் திறந்து விடுமாறு ஆணையர் தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...