Sunday, March 5, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/06/large/956181.jpgகாவேரி குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? - ஆர்.பி. உதயகுமார் கேள்வி

மதுரை: தென் மாவட்ட மக்களுடைய தொழில் வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புக்கும் வாய்ப்பளிக்கும் காவேரி குண்டாறு நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை மாவட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின், இரண்டு நாட்கள் கள ஆய்வு செய்வதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான ஜெயலலிதா அரசில் கோவை, சேலம், மதுரைக்கு பஸ் போர்ட் என்கிற மத்திய அரசின் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதற்கான நிலம், திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செக்கானூரணி பகுதியில் கண்டறியப்பட்டது. அதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின், கள ஆய்வில் விவாதித்து நடவடிக்கை எடுக்கப்பாரா?



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...