Wednesday, March 15, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/16/large/961163.jpgநாடு முழுவதும் வேகமாக பரவும் புதிய வகை வைரஸ் காய்ச்சல் - சிறுவர்கள், முதியவர்கள் உட்பட 3,000 பேர் பாதிப்பு

புதுடெல்லி / சென்னை: நாடு முழுவதும் எச்3என்2 உள்ளிட்ட இன்ஃப்ளூயன்சா வகை வைரஸ் காய்ச்சல்களால் 3,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனா தொற்றும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 617 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு ‘எக்ஸ்பிபி.1.16’ புதிய வகை கரோனா காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இன்ஃப்ளூயன்சா-ஏ வகை வைரஸான எச்3என்2 தொற்று, நாடு முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது. எச்3என்2 உள்ளிட்ட இன்ஃப்ளூயன்சா வகை வைரஸ் காய்ச்சல்களால் நாடு முழுவதும் குழந்தைகள், சிறுவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டோர் என சுமார் 3,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் பல குழந்தைகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...