
சென்னை: மருத்துவக் கல்வி இயக்ககத்தின் இயக்குநராக டாக்டர் ஆர்.சாந்திமலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக (பொறுப்பு) ஆயிஷா சாகீம் நியமிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவக் கல்வி இயக்கத்தின் இயக்குநராக (டிஎம்இ) இருந்த டாக்டர் நாராயணபாபு கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். எனவே, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாகவும், டிஎம்இ கூடுதல் இயக்குநராகவும் இருந்த டாக்டர் ஆர்.சாந்திமலர் டிஎம்இ இயக்குநராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டார். அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்