Thursday, April 6, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/07/large/972177.jpgதருமபுரி | கொசுக்கள் குறித்த ஆய்வில் ஈடுபடும் பேராசிரியர் - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ரூ.67 லட்சம் நிதியுதவி

தருமபுரி: கொசுக்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டு வரும் உயிர் தொழில்நுட்பவியல் துறை பேராசிரியருக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்(ஐசிஎம்ஆர்) ரூ.67 லட்சம் நிதி நல்கை வழங்கியுள்ளது.

தருமபுரி அடுத்த பைசுஅள்ளியில், சேலம் பெரியார் பல்கலைக் கழக கட்டுப்பாட்டில் பெரியார் பல்கலைக் கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்சி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தின் உயிர் தொழில்நுட்பவியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றுபவர் முனைவர் காமராஜ். இவர், மலேரியா பரப்பும் கொசுக்கள் மீதான பல்வேறு பருவகால மற்றும் புவியியல் மாறுபாடுகளின் விளைவுகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆய்வை மேம்படுத்த, மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐசிஎம்ஆர்) சார்பில் ரூ.67 லட்சம் நிதி நல்கை வழங்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...