Friday, April 14, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/15/large/976127.jpgமாநில கல்விக் கொள்கை - வரைவு அறிக்கை தயாரிக்க அவகாசம் கோரி கடிதம்

சென்னை: மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க, முன்னாள் நீதிபதி த.முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இக்குழு சார்பில் ஜூன் மாதத்துக்குள் வரைவு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அறிக்கை தயாரிப்பு பணி இன்னும் முடியாததால், குழு சார்பில் 3 மாதங்கள் கூடுதல் அவகாசம் கோரப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் நடந்த மாநில கல்விக் கொள்கை குழு ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கோரிக்கை கடிதம் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பணியை முடித்து அரசிடம் செப்டம்பரில் வரைவு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...