Friday, April 7, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/08/large/972266.jpgஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாட்டை கண்டித்து ஏப்.12-ல் ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு

சென்னை: தமிழகத்துக்கு வந்தது முதல் ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுகள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் சர்ச்சைக்கு உரியதாகவும், மர்மமானதாகவும் இருக்கின்றன. அவரது நடவடிக்கைகளை கண்டித்து வரும் 12-ம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக உள்ளிட்ட மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.

இதுதொடர்பாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்முத்தரசன், ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீன், விசிக தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தவாக தலைவர் வேல்முருகன் ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...