Friday, April 7, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/08/large/972263.jpgபிரதமர் மோடி இன்று சென்னை வருகை - 22,000 போலீஸாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு

சென்னை: சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். சென்னை - கோவை ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை தொடங்கி வைக்கும் அவர், ரூ.3,700 கோடி மதிப்புள்ள புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு, சென்னையில் 22 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடி மதிப்பில் 1.36 லட்சம் சதுர மீட்டரில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். சென்னை - கோவை இடையே ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில் சேவை இன்று முதல் தொடங்குகிறது. இந்த சேவையையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...