Friday, April 14, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/15/large/975785.jpgமேட்டூர் | ராணுவ வீரர் உடலுக்கு அரசு மரியாதை வழங்க கோரி மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

மேட்டூர்: பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் உயிரிழந்த ராணுவ வீரர் கமலேஷ் உடலுக்கு அரசு மரியாதை வழங்க கோரி வாகனம் முன்பு அமர்ந்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரத்திற்கு பிறகு ராணுவ வாகனத்தில் உடலை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் 13ம் தேதி காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 வீரர்கள் பரிதாபமாக பலியாகினர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த சேலம் மாவட்டம் மேட்டூர் வனவாசி அருகே உள்ள பனங்காட்டை சேர்ந்த கமலேஷ், தேனி மாவட்டத்தை சேர்ந்த யோகேஷ்குமார் ஆகிய 2 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் உயிரிழந்த வீரர்களுக்கு நேற்று பிரேத பரிசோதனை செய்து, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...