Tuesday, May 2, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/03/large/984811.jpgஇன்று மாலை அழகர்கோயிலில் இருந்து கள்ளழகர் புறப்பாடு - மதுரையில் போக்குவரத்து மாற்றம்

மதுரை: சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தை முன்னிட்டு, அழகர்கோயிலில் இருந்து அழகர் இன்று (மே 3) மாலை மதுரை நோக்கி புறப்படுகிறார். இதற்காக, நகரில் போக்குவரத்து மாற்றம் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் குறித்து போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.

அதன்படி, அழகர்கோவில் நோக்கி கடச்சனேந்தல், அப்பன் திருப்பதி வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் இன்றுபிற்பகல் 3.30 மணிக்கு மேல் மதுரை-அழகர்கோயில் சாலையில் தற்காலிகமாக நிறுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதில், கேரளா நீட் அகாடமி - நான்கு சக்கர வாகனங்கள். மாங்காய் தோட்டம் - டாடா ஏஸ் மற்றும் சிறிய ரக சரக்கு வாகனங்கள். பொய்கைகரைப்பட்டி தெப்பம் - இரு சக்கர வாகனங்கள், பயணிகள் பேருந்துகள் வந்து செல்லலாம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...