Saturday, May 13, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/14/large/989955.jpgமுதல்வரின் முதன்மை செயலர் உதயச்சந்திரன் உள்ளிட்ட 14 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: முதல்வரின் முதன்மைச் செயலராக இருந்த உதயச்சந்திரன் உள்ளிட்ட 14 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, தலைமைச் செயலர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்கல்வி ஆணையராக இருந்த கே.நந்தகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அந்தப் பொறுப்புக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.

தமிழக அமைச்சரவை அண்மையில் மாற்றம் செய்யப்பட்டது. பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி.ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டது. மேலும், நிதித் துறை அமைச்சராக இருந்த பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட 4 அமைச்சர்களின் துறைகள் மாற்றம் செய்யப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...