
சென்னை: மக்கள்தொகை அடிப்படையில் சமூக வாரியாக இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்த செயல் திட்டம் வகுக்க வேண்டும் என அரசியல் கட்சிகளை விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்