
கோவை: கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் பயிற்சி செவிலியர்களுக்கு திடீர் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதை அடுத்து குடிநீர் மாதிரிகளை சேகரித்து சுகாதாரத் துறையினர் ஆய்வுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
கோவையில் செயல்பட்டுவரும் தனியார் மருத்துவமனையில் 500-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், பயிற்சி செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2-ம் தேதி பல செவிலியர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட செவிலியர்களுக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்