Monday, June 5, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/06/large/1003554.jpgபெரம்பலூர் | அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து - மீட்பு பணிக்கு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உட்பட 3 பேர் உயிரிழப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே 4 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய விபத்தில் மீட்பு பணிக்குச் சென்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திண்டுக்கல் நாகல் நகரைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவர், தனது உறவினர்களுடன் வேனில் திருவண்ணாமலை சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு மீண்டும் திண்டுக்கல்லுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரை அடுத்த தண்ணீர்பந்தல் அருகே நேற்று அதிகாலை 2.30 மணியளவில் சென்றபோது, முன்னால் சென்ற டிராக்டர் மீது வேன் மோதியது. இதில், சென்டர் மீடியனில் வேன் ஏறி நின்றது. டிராக்டர் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், டிராக்டரை ஓட்டிவந்த ராமநாதபுரம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சாமிதாஸ், அருகே அமர்ந்திருந்த சேகர் ஆகியோர் காயமடைந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...