Thursday, July 13, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/13/large/1049701.jpgபுதிய இடத்தில் அமைகிறது கோவை மத்திய சிறை - விரிவான திட்ட அறிக்கை தயாரிப்புப் பணி தீவிரம்

கோவை: கோவை மத்திய சிறை, புதியதாக சிறை அமைக்கப்பட உள்ள இடம் ஆகிய இடங்களில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் இன்று ஆய்வு செய்தார்.

கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் 165 ஏக்கரில் கோவை மத்திய சிறை அமைந்துள்ளது. சிறை வளாகத்தில் உள்ள 45 ஏக்கர் நிலம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் செம்மொழிப் பூங்காவுக்காக மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 120 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் கைதிகள் அடைக்கும் இடம், சிறை தொழிற்கூடங்கள், குடோன்கள் ஆகியவை உள்ளன. கோவை மத்திய சிறையை இடமாற்றிவிட்டு, அங்கு செம்மொழிப்பூங்கா அமைக்கப்படும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...