Saturday, July 15, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/15/large/1052036.jpgகட்சியின் சொத்தை அபகரிக்க முயற்சி? - பதவியில் இருந்து தி.மலை மாவட்ட காங்கிரஸ் தலைவர் நீக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகர காங்கிரஸ் கமிட்டியின் ரூ.75 கோடி மதிப்புள்ள இடத்தை குத்தகை விடுவதன் மூலமாக கையகப்படுத்த முயன்றதாக கூறப்படும் புகார் காரணமாக திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து செங்கம் ஜி.குமார் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியினர் கூறும்போது, “திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் ஒன்றான பே கோபுரத் தெருவில் 1 ஏக்கர் 40 சென்ட் நிலத்தை, திருவண்ணாமலை நகர காங்கிரஸ் கமிட்டிக்கு, காங்கிரஸ் நிர்வாகி அண்ணாமலைப் பிள்ளை என்பவர் கடந்த 1960-ல் தானமாக வழங்கி உள்ளார். காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுபோது, 1.40 ஏக்கர் இடமும் ஜனதா கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்டுப்பாட்டில், கடந்த 1977-ம் ஆண்டு முதல் உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...