Monday, August 14, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/15/large/1093014.jpgசதுரகிரி மலைப்பாதையில் பழங்குடியினர் கடைகள் வைக்க அனுமதி இல்லை - புலிகள் காப்பக துணை இயக்குனர் திட்டவட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி மலைப்பாதையில் கடைகள் வைப்பதற்கு அனுமதிக்க முடியாது என பழங்குடியினர் உடனான பேச்சுவார்த்தையில் புலிகள் காப்பகத் துணை இயக்குனர் திலீப் குமார் திட்டவட்டமாக தெரிவித்தார். பழங்குடியினரின் வாழ்வாதாரத்திற்காக குடும்பத்தில் ஒருவருக்கு சூழல் மேம்பாட்டுக் குழுவில் பணி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை ராம்கோ நகர் பழங்குடியின மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9-ம் தேதி முதல் வனப்பகுதியில் குடியேறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை குடியிருப்பு பகுதிகளுக்கு திரும்ப அழைத்து வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை கடந்த 12-ம் தேதி சிவகாசி கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. அதில் உடன்பாடு ஏற்படாததால் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ராம்கோ நகர், அத்தி கோயில், செண்பகத்தோப்பு, வள்ளியம்மாள் நகர், அய்யனார் கோயில், ஜெயந்த் நகர் ஆகிய 6 பழங்குடியினர் கிராமங்களில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...