Thursday, August 10, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/11/large/1090498.jpgசொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து பொன்முடி விடுதலையை எதிர்த்து உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியை வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளார். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை, அமைச்சர் பொன்முடி பதில் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, கடந்த 1996-2001 திமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.36 கோடி அளவுக்கு சொத்து குவித்துள்ளதாகஅவர் மீதும், அவரது மனைவி விசாலாட்சி, மாமியார் சரஸ்வதி மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் மீதும் லஞ்ச ஒழிப்பு துறை கடந்த 2002-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...