Monday, August 7, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/08/large/1086629.jpg‘நான் முதல்வன்’ திட்டத்தில் இலக்கை தாண்டி 13 லட்சம் பேருக்கு உயர் தர திறன் பயிற்சி - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: ‘நான் முதல்வன்’ திட்டம் தொடங்கப்பட்டு முதல் ஆண்டிலேயே 13 லட்சம் மாணவர்களுக்கு, உயர் தரத்தில் திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதுதான் இத்திட்டத்தின் மிகப்பெரிய சாதனை என்று ஓராண்டு வெற்றி விழாவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில், சாதனை திட்ட கண்காட்சியை திறந்துவைத்து பார்வையிட்ட முதல்வர், இத்திட்டத்தின் கூட்டாண்மை பொறுப்பில் சிறந்து விளங்கிய நிறுவனங்களுக்கு நினைவுப் பரிசு, சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். ஹேக்கத்தான் ‘நிரல் திருவிழா’ போட்டிக்கான இணையதளத்தை தொடங்கிவைத்தார், அண்ணா பல்கலைக்கழகம், 459 பாலிடெக்னிக், 432ஐடிஐகளில் தொழில்சார் படிப்புகளை தொடங்கி வைத்தார். ‘கலைஞர்100’ இணையதளத்தை தொடங்கி வைத்ததுடன், நான் முதல்வன் கீதத்தையும் (Anthem) அறிமுகம் செய்து வைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...