Monday, September 4, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/05/large/1118321.jpgஅடிப்படை கட்டமைப்பை சிதைக்க முயற்சிக்கும் பாஜக: ‘இந்தியாவுக்காக பேசுகிறேன்’ குரல் பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: ‘‘மாநிலங்களை பழிவாங்கும் அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது. மாநில அரசுகளை சிதைப்பதன் மூலம், ஒட்டுமொத்த இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பையே சிதைக்க பாஜக முயற்சிக்கிறது. சமூக நீதி, மதச்சார்பற்ற அரசியல், பொதுவுடைமை, சமதர்மம், மாநில சுயாட்சி, கூட்டாட்சி ஆகியவை உயிர்ப்போடு வாழும் இந்தியாவை மீ்ட்டெடுக்கத்தான் இண்டியா கூட்டணியை உருவாக்கியுள்ளோம். இந்தியாவை காப்பாற்றப்போவது இண்டியா கூட்டணிதான்’’ என்று ‘இந்தியாவுக்காக பேசுகிறேன்’ என்ற குரல் பதிவின் முதல் அத்தியாயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

‘இந்தியாவுக்காக பேசுகிறேன்’ என்ற பெயரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது முதல் குரல் பதிவை நேற்றுவெளியிட்டார். இந்த குரல் பதிவு, தமிழ் தவிர இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கிலும் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...