Friday, September 15, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/16/large/1123857.jpgசிவகாசி மாநகராட்சியில் ஒப்பந்ததாரர்கள் பிரச்சினையால் டெண்டருக்கு முட்டுக்கட்டை: கிடப்பில் வளர்ச்சி பணிகள்

சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் ஒப்பந்ததாரர்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகளால் டெண்டருக்கு முட்டுக்கட்டை போடுவதால், நிதி வந்தும் டெண்டர் விட முடியாமல் வளர்ச்சி பணிகள் கிடப்பில் உள்ளன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகள் இணைக்கப்பட்டு கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று அக்கட்சியை சேர்ந்த சங்கீதா மேயராகவும் விக்னேஷ் பிரியா துணை மேயராகவும் தேர்வு செய்யப்பட்டனர். முதலில் கவுன்சிலர்கள் திருத்தங்கல், சிவகாசி என பிரிவாக பிரிந்து பிரச்சனையை கிளப்பி வந்தனர். அதன்பின் குடிநீர் இணைப்பு வழங்கியதில் முறைகேடு புகார், சொத்து வரி தொடர்பான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகார், திமுக கவுன்சிலரை தகுதி நீக்கம் செய்யக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பியது, கவுன்சிலரின் கணவர் கொலை மிரட்டல் விடுத்ததாக ஆணையர் போலீஸில் புகார் அளித்தது என அடுத்தடுத்து சிவகாசி மாநகராட்சியில் தொடர் சர்ச்சைகள் நிலவி வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...