Saturday, November 4, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/04/large/1148519.jpgதமிழகத்தில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் இன்று தொடக்கம்: முதல்வர் தொடங்கி வைக்கிறார்

சென்னை: நடைபயிற்சி செய்யும் பழக்கத்தை பொதுமக்களிடம் ஊக்குவிக்கும் வகையில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ (Health Walk) என்ற சிறப்பு திட்டத்தை தமிழக சுகாதாரத் துறை செயல்படுத்துகிறது. இன்று காலை 8 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இத்திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்ஸ்டாலின், மற்ற மாவட்டங் களில் காணொலி மூலமாக தொடங்கி வைக்கிறார்.

இதையொட்டி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 8 கி.மீ. நீளத்துக்கு பிரத்யேகநடைபாதை அமைக்கப்பட்டுள் ளது. சென்னை பெசன்ட் நகரில்டாக்டர் முத்துலட்சுமி பூங்காவில் தொடங்கி, பெசன்ட் நகர் அவென்யூ சாலை, எலியட்ஸ் கடற்கரை வரை இப்பாதை நீள்கிறது. இங்கு வாகனங்கள் நிறுத்தம், ஓய்வு இருக்கைகள், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. செல்லப் பிராணிகளுடன் நடைபயிற்சி மேற்கொள்ளவும் வசதிசெய்யப்பட்டுள்ளது. மாதத் தின் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை மாநகராட்சியுடன் இணைந்து ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் குறித்த மருத்துவ பரிசோதனை முகாம் இங்கு நடத்தப்பட உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...