
சென்னை: அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க கோரி உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கை உடனே விசாரிக்குமாறு முறையிடப்பட்டதால், நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி பொதுச் செயலாளர் பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்