Friday, December 8, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/08/large/1164935.jpgஅரபிக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வானிலை ஆய்வு மையம்

சென்னை: அரபிக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக இந்த தாழ்வுப் பகுதி உருவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தின் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை மழை பதிவானது. இந்நிலையில், நாளை (சனிக்கிழமை) இந்த மாவட்டங்களில் மழை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்தடுத்த நகர்வுகளை பொறுத்தே மழை பொழிவு எங்கு இருக்கும் என்பது தெரியவரும் என வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...