Sunday, January 7, 2024

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/08/large/1180547.jpgபொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சென்னை: வரும் 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்வோர் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு கடந்த செப்டம்பரில் தொடங்கி, விரைவாக முடிந்தது. வரும் 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை பெரும்பாலான ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது.

ரயில்களில் முன்பதிவு செய்யமுடியாத பொதுமக்கள், சிறப்பு ரயில்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்நிலையில், முன்பதிவில்லாத ரயில் உள்ளிட்ட 3 சிறப்பு ரயில்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு ஜன. 14,16-ம் தேதியும், மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து ஜன. 15,17-ம் தேதி ஜன் சதர்ன் விரைவு ரயில் (24 பெட்டிகளைக் கொண்ட முன்பதிவில்லாத ரயில்) இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...