
இறப்பு பதிவு தவறியவர்கள் தாமதமாக பதிவிட்டு இறப்புச் சான்றிதழ் கோரினால் அதற்கு உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் வசூலிக்கப்படும் தாமதக் கட்டணத்தை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதைப் பொருட்படுத்தாமல் விருத்தாசலம் நகராட்சியில் இறப்புச் சான்றி தழுக்கு கட்டண வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டின் வளர்ச்சி திட்டங்களை வகுக்க பிறப்பு, இறப்பு தொடர்பான புள்ளி விவரங்கள் அவசியம். அதற்காக 1969-ம் ஆண்டு பிறப்பு, இறப்பு பதிவு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி 2000-ம் ஆண்டு தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவு விதிகள் உருவாக்கப்பட்டது. அதில் கடந்த 2017-ம் ஆண்டு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்