
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 2-ம் நிலை காவலர், 2-ம்நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர்என 10,906 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி வெளியானது. இதற்கான எழுத்து தேர்வு கடந்த டிசம்பர்13-ம் தேதி தமிழகம் முழுவதும் நடந்தது.
இப்பணிகளுக்காக 5.50 லட்சம் பேர்விண்ணப்பித்தனர். இதில் 4.91 லட்சம்பேர் எழுத்து தேர்வில் கலந்து கொண்டனர். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் விவரத்தை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் கடந்த பிப்ரவரி 19-ம்தேதி வெளியிட்டது. 1:5 என்ற விகிதத்தில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு,உடற்திறன் போட்டி ஆகியவை கடந்தஏப்ரல் 21-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாக காரணங்கள் மற்றும் கரோனா ஊரடங்கு காரணமாக தேர்வு தேதி மாற்றப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்