Sunday, July 4, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/05/large/689575.jpgகோவை முத்துக்கவுண்டன்புதூர் ஊராட்சியில் பசுஞ்சோலையாக மாறிய திறந்தவெளி கழிப்பிடம்: பலவகை மரங்களில் பழங்கள் அறுவடை

கோவை சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன்புதூர் ஊராட்சியில் அண்ணாநகர், முதலிபாளையம், குரும்பபாளையம், முத்துக்கவுண்டன்புதூர், காளியாபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலான வீடுகளில் கழிப்பிட வசதி இல்லாததால், முதலிபாளையத்தில் மந்தைவெளி புறம்போக்காக இருந்த சுமார் 3.75 ஏக்கர் நிலத்தை, திறந்தவெளி கழிப்பிடமாக மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். சீமைக்கருவேல முள் மரங்கள் வளர்ந்து, பள்ளமும், மேடுமாக காட்சியளித்த அந்த இடம் தற்போது பசுஞ்சோலைபோல மாறியுள்ளது. அரசு சார்பில் ஏழைகளுக்கு கழிப்பறைகளை கட்டிக்கொடுத்துள்ளனர். மற்றவர்கள் தாங்களாகவே வீடுகளில் கழிப்பறைகளை கட்டிக்கொண்டுள்ளனர்.

இந்த மாற்றம் குறித்து ஊராட்சித் தலைவர் வி.பி.கந்தவேல் கூறியதாவது: கடந்த 2016-ம் ஆண்டு, அப்போதைய மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (டிஆர்டிஏ) திட்ட இயக்குநர் ரூபன் சங்கர்ராஜ் அறிவுறுத்தலின்படி, நிலத்தின் ஒருபகுதியில் நர்சரியும், எஞ்சியுள்ள இடங்களில் மரக்கன்றுகளும் நட முடிவு செய்யப்பட்டது. முதலில் இடத்தைச் சுற்றிலும் கம்பி வேலி அமைத்தோம். பின்னர், சொட்டுநீர் பாசன வசதிக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...