
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி சசிகலா தொடர்ந்த வழக்கில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என அவரது வழக்கறிஞர் என்.ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில்சசிகலா இருந்தபோது, கடந்த 2017 செப்டம்பர் 12-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது.அதில் பொதுச் செயலாளர், துணைபொதுச் செயலாளர் பதவியில் இருந்துசசிகலா, டிடிவி தினகரன் நீக்கப்பட்டு,கட்சி ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்