Tuesday, July 6, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/07/large/690255.jpgகரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்காக கே.நாராயணசாமியின் ‘கோவிட் புனர்வாழ்வு கையேடு’- சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்

கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்காக மருத்துவர் கே.நாராயணசாமி எழுதிய கோவிட் ‘(கரோனா) புனர்வாழ்வு கையேட்டை’ சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

கிண்டி அரசு கரோனா மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் கே.நாராயணசாமி எழுதிய, ‘கோவிட் (கரோனா) புனர்வாழ்வு கையேடு’ வெளியீட்டு நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கையேட்டை வெளியிட, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் பெற்றுக்கொண்டார். சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், கிண்டி அரசு கரோனா மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் கே.நாராயணசாமி ஆகியோர் உடனிருந்தனர். அப்போது, ஜப்பான் டோக்கியோ தமிழ்ச்சங்கம், ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் வழங்கிய ரூ.18 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகள், ரூ.6 லட்சம் மதிப்புள்ள நவீன ரத்த பரிசோதனை கருவிகளை அமைச்சர் பெற்றுக் கொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...