
கல்வராயன்மலையில் ட்ரோன் கேமராவைப் பயன்படுத்தி கள்ளச்சாராய ஊறல்களை கள்ளக் குறிச்சி போலீஸார் நேற்று அழித்தனர்
கள்ளக்குறிச்சி எஸ்பி ஜியாவுல்ஹக் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். காவல் ஆய்வாளர்கள் தலைமையில் சிறப்பு படைகள் அமைத்து கல்வராயன்மலை முழுவதும் கள்ளச்சாராயம் ஊறல்களை அழிப்பதும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை கைது செய்வது, கள்ளச்சாராயத்தின் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பணிகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்