
இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) சார்பில் கோவையில் இருந்து தாஜ்மஹாலுக்கு விமானம் மூலம் சுற்றுலா செல்வதற்காக முன்பதிவு தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக ஐஆர்சிடிசி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ரயில் மூலம் மட்டுமல்லாமல் விமானம் மூலமாகவும் பல்வேறு சுற்றுலா திட்டங்களை ஐஆர்சிடிசி செயல்படுத்திவருகிறது. அதன் ஒருபகுதியாக, வரும் செப்டம்பர் 11-ம் தேதி கோவையில் இருந்து விமானம் மூலம் காசி, அலகாபாத், புத்த கயா ஆகிய ஆன்மிக சுற்றுலா தலங்களுக்கு செல்ல ரூ.27,460 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2-ம் தேதி கோவையில் இருந்து விமானம் மூலம் ஜெய்ப்பூர், ஆக்ரா (தாஜ்மஹால்), டெல்லி ஆகிய இடங்களுக்கு சுற்றுலா செல்ல 26,600 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், விமான கட்டணம், நட்சத்திர ஹோட்டலில் தங்கும் வசதி, ஏசி வாகன போக்குவரத்து, காலை, இரவு உணவு, ஜிஎஸ்டி ஆகியவை அடங்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்