Thursday, July 8, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/09/large/690959.jpgஅரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? - தனியார் கல்லூரிகளில் சேர்க்கை தொடங்கியதால் பெற்றோர் அச்சம்

கரோனா ஊரடங்கு காரணமாக பிளஸ் 2 தேர்வுகள் நடத்த முடியாத சூழலில், மதிப்பெண்கள் வழங்குவதிலும் தொடர்ந்து தாதமதம் ஏற்படுவதால் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியவில்லை. ஆனால் சில தனியார் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுவதால் பெற்றோர்களும், மாணவர்களும் கவலை அடைந்துள்ளனர்.

ஜூலை இறுதிக்குள் பிளஸ் 2 மதிப்பெண் வழங்கப்படும் என அரசு நம்பிக்கை தெரிவிக்கும் நிலையில், ஆகஸ்ட் மாதம் இளநிலை பாடங்களுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும் என கல்லூரி முதல்வர்கள் கூறியுள்ளனர். கடைசி நேரத்தில் தங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை குறையலாம் என்ற அச்சத்தில் சில தனியார், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் முன்கூட்டியே ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறுகின்றனர். ஆனால் அரசு கல்லூரிகளில் இது போன்ற நடைமுறை பின்பற்றப்படாததால், மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாமல் காத்திருக்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...