
உடுமலை அடுத்த ஆத்துக் கிணத்துப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். விவசாயி. இவரதுமகள், உடுமலையில் தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு பயின்று வந்தார்.
தனியார் பள்ளிக்கு கட்டணம் செலுத்த முடியாமல், அங்கிருந்துவிலகி, மாற்றுச்சான்றிதழ் பெற்றுக்கொண்டு, பூளவாடி அரசுப் பள்ளியில் சேர்வதற்காக பெற்றோருடன் சென்றுள்ளார். அப்போது,மாற்றுச் சான்றிதழில் இடைவிலகியதாக குறிப்பிடப்பட்டுள்ளதால்,அரசுப் பள்ளியில் சேர்க்க முடியாது என பள்ளித் தலைமையாசிரியர் திருப்பி அனுப்பியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்