
புழுதிவாக்கம் பஸ் நிலையம்மக்களுக்கு முழுமையாக பயன்படும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் கூறினார்.
சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் நேற்று புழுதிவாக்கம், ஷீலாநகரில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள நூலகக் கட்டிடத்துக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார். பின்னர் நலச் சங்கத்தினரின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது குறைந்த மின் அழுத்தம், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்புதொடர்பாக பலரும் மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து அவர் புழுதிவாக்கம் பேருந்து நிலையம் மற்றும் மயான பூமி, மாநகராட்சி பள்ளிகளில் உள்ள பழைய வகுப்பறைகளை மேம்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்