Sunday, July 11, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/12/large/692148.jpgநான்கு ஆண்டுகளாக தொடரும் தவிப்பு; கிரண்பேடி அமல்படுத்திய நடைமுறையால் மாத ஊதியம் சரியாக கிடைப்பதில்லை: 21 சொசைட்டி கல்லூரி ஊழியர்கள், பேராசிரியர்கள் புகார்

இடையூறின்றி மாத ஊதியம் வழங்குமாறு புதுச்சேரி அரசு 21 சொசைட்டி கல்லூரி ஊழியர்கள், பேராசிரியர்கள் கோருகின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை நிதி ஒப்புதல் பெறும் முறையை மாற்றி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒப்புதல் பெற வேண்டும் என்று அப்போதைய ஆளுநர் கிரண்பேடி அமல்படுத்திய நடைமுறை தொடர்வதால் மாத ஊதியம் சரியாக கிடைப்பதில்லை என்று புகார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 1986-ம் ஆண்டு முதல் புதுவை அரசு பல உயர்கல்வி நிறுவனங்களை, 13 உயர்கல்வி குழுமங்களின் மூலம் நிர்வகித்து வருகிறது. இவ்வாறாக மொத்தம் 21 உயர்கல்வி நிறுவனங்கள் புதுவை, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்த உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் சார்பு துறைகள் மூலம் முழுமையான நிதி வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 1,000 பேராசிரியர்களும், 4,500 ஆசிரியரல்லாத ஊழியர்களும் இந்த உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...