
முறையாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 38 கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக கடந்த ஜூலை 6-ம் தேதி விண்ணப்பங்களை வரவேற்று அறநிலையத் துறை சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டது. இதில் அர்ச்சகர்களுக்கான ஓராண்டு சான்றிதழ் படிப்பை முடித்தவர்களும் அர்ச்சகர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்