Sunday, August 29, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/30/large/710591.jpgசிவகங்கை அருகே உணவுக் கழிவு மூலம் மின்சாரம் தயாரிக்கும் கிராமத்துக்கு பிரதமர் பாராட்டு

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று பேசினார். அப்போது சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் கிராமத்தில் உணவுக் கழிவில் இருந்து மின்சாரம் தயாரித்து, மின் தேவையை தாங்களே பூர்த்தி செய்து கொள்வதை பாராட்டியுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் 7 ஊராட்சிகளில் ரூர்பன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் காஞ்சிரங்காலில் ரூ.66 லட்சத்தில் உணவுக் கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 2 டன் உணவுக் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும். இதற்காக காஞ்சிரங்கால் ஊராட்சி, சிவகங்கை நகராட்சி ஆகிய பகுதிகளில் தினமும் காய்கறி, கோழி, மீன் ஆகிய உணவுக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. பிறகு அவற்றை அரைத்து நீரில் கலந்து அங்குள்ள கிடங்கில் ஊற்றுகின்றனர். அவை மக்கி மீத்தேன் வாயுவாக மாறுகிறது. பிறகு அதன் மூலம் ஜெனரேட்டரை இயக்கி 220 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...