Sunday, August 29, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/30/large/710589.jpgவேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா பக்தர்களின்றி கொடியேற்றத்துடன் தொடக்கம்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கொடி ஊர்வல நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் நேற்று மாலை 4.30 மணிக்கு கோயில் வளாகத்துக்குள்ளேயே கொடி ஊர்வலம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் கொடியை புனிதம் செய்துவைக்க, கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது, பேராலயம் முழுவதும் அலங்கரிக்கப்பட்ட மின்விளக்குகள் ஒளிரவிடப்பட்டன. தொடர்ந்து, பேராலயத்தில் திருப்பலி நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...