Saturday, August 28, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/29/large/710321.jpgஇலங்கை அகதிகள் முகாமை இனிமேல் மறுவாழ்வு முகாம் என அழைக்க அரசாணை வெளியீடு: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சட்டப்பேரவையில், திருவாரூர் திமுக உறுப்பினர் பூண்டி கலைவாணன் நேற்று பேசும்போது, ‘‘இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் அவர்களுக்கான அடிப்படைதேவைகள், கல்வி உள்ளிட்டவற்றுக்கான அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார்’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஸ்டாலின், ‘‘உறுப்பினர் பேசும்போது, இலங்கை தமிழ் அகதிகள் என்று குறிப்பிட்டார். இன்றுமுதல் ‘இலங்கை தமிழ் அகதிகள் முகாம்’ என்று கூறாமல், ‘மறுவாழ்வு முகாம்’ என்று கூற வேண்டும். அவர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல; அவர்களுக்கு துணையாக நாம் இருக்கிறோம். எனவே, அகதிகள் முகாம் என்று அழைக்காமல் ‘இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்’ என்று அழைக்க வேண்டும்என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது’’ என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...