Sunday, August 8, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/09/large/702793.jpg‘தயவு செய்து லஞ்சம் தர வேண்டாம்’ - அறிவிப்பு பலகை வைத்த விஏஓ

தமிழகத்தில் லஞ்சம் வாங்காத அதிகாரிகளை காண்பது அரிதாகி விட்டது. இந்நிலையில், சமீபத்தில் காரைக்குடி அருகே கூத்தலூர் கிராம நிர்வாக அலுவலராக பொறுப்பேற்ற அருள்ராஜ், தனது அலுவலகத்தில் தயவு செய்து லஞ்சம் தராதீர், லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து என அறிவிப்பு பலகை வைத்துள்ளார். மேலும் இதுதொடர்பான அறிவிப்பை தனது முகநூல் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். இதை கிராம மக்கள் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து விஏஓ அருள்ராஜ் கூறியதாவது: 2014-ல் பணியில் சேர்ந்தது முதல், தற்போது வரை லஞ்சம் வாங்கியதில்லை. எனது பெயரை பயன்படுத்தி, யாரும் பணம் வாங்கிவிடக் கூடாது என்பதற்காகத் தான் இந்த அறிவிப்பு பலகை வைத்தேன் என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...