Thursday, August 5, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/06/large/701750.jpgஏலச்சீட்டு மோசடி, நிலத்தை அபகரிக்க முயற்சி - திமுக பிரமுகர் உட்பட 4 பேர் மீது வழக்கு

காஞ்சிபுரத்தில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததுடன், நிலத்தையும் அபகரிக்க முயன்றதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் திமுக பிரமுகர் உள்பட 4 பேர் மீது போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பெரியகாஞ்சிபுரம் ராயன்குட்டைத் தேருவைச் சேர்ந்தவர் சேகர். இவர் விளக்கடி கோயில் தெருவில் இயங்கி வரும் எஸ்.கே.பி. நிதி நிறுவனத்தின் இயக்குநரான சீனுவாசன், சந்தோஷ், கார்த்திக், சரவணபெருமாள் ஆகியோர் தனக்கு சேர வேண்டிய ரூ.38 லட்சத்து 35 ஆயிரம் தொகையை கொடுக்கவில்லை என்றும், தன் பெயரில் உள்ள பத்திரம், தனது தந்தையின் பெயரில் உள்ள பத்திரத்தையும் தன்னிடம் பவர் பெற்று போலியாக எழுதிக் கொண்டதாகவும் கிண்டியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குநர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...