
தமிழகத்தில் சமூகச் சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் தொண்டாற்றும் பெண்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் அவ்வையார் விருது வழங்கப்படுகிறது.
நடப்பாண்டுக்கான விருது, ஈரோடு சக்தி மசாலா நிறுவனங்களின் இயக்குநரும் சக்தி தேவி அறக்கட்டளையின் அறங்காவலருமான சாந்தி துரைசாமிக்கு கிடைத்துள்ளது. இவர் சக்தி மசாலா சமையல் நிறுவனத்தை கணவர் பி.சி.துரைசாமியுடன் இணைந்து நடத்தி வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்