Wednesday, September 1, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/02/large/711652.jpgதமிழகத்தில் வழக்கிழந்த 89 சட்டங்களை நீக்க மசோதா: பேரவையில் அமைச்சர் ரகுபதி தாக்கல்

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்த நிலையில், சட்ட முன்வடிவை சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தாக்கல் செய்தார். சட்ட முன்வடிவுக்கான நோக்க காரண உரையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு மாநில சட்ட ஆணையமானது, பல்வேறு இயற்றுச்சட்டங்கள் மிகவும் பழமையானதாக மற்றும் வழக்கத்தில் இல்லாமல் போயிருக்கும் சட்டங்களை நீக்குவதற்கு பரிந்துரைத்துள்ளது. மேலும், மத்திய அரசின்சட்டமியற்றும் துறை, சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம் ஆகியவை 1858-ம் ஆண்டு தமிழ்நாடுகட்டாய தொழிலாளர் சட்டத்தை நீக்கம் செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்துள்ளது. மாநில சட்ட ஆணையம் மற்றும் மத்திய அரசின் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு மிகவும் பழமையான மற்றும் வழக்கத்தில் இல்லாமல் போயுள்ள சட்டங்களை நீக்க அரசு முடிவெடுத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...