
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் விரைவில் அறிவிக்கப் படும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட் டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக் கான தேர்தலை செப்டம்பர் 15-ம் தேதிக் குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண் டுள்ளது. இதற்கிடையே, இத்தேர்தலை நடத்த மேலும் 6 மாதங்கள் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள மாநில தேர்தல் ஆணையம், அதேநேரத்தில் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்